LATEST NEWS
நெஞ்சை நெகிழ வைத்த தருணம்..! மாற்றுத்திறனாளி சிறுமியின் ஆசையை நிறைவேற்றி செல்ஃபி எடுத்த முதல்வர் விஜய்.. வைரலாகும் வீடியோ..!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.
அப்போது, விழாவில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையுடன் கோரிக்கை விடுத்தார். சிறுமியின் அன்பான வேண்டுகோளை உடனே ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், அவரிடம் நலம் விசாரித்து, அவரே தனது கைகளால் அந்தச் சிறுமியுடன் நெகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
