“3 லட்சம் சம்பளம், KTM பைக்” அவன் குடிக்கலைனாலும் நானே ஊத்திக் கொடுப்பேன்… வருங்காலக் கணவர் குறித்து டிவி ஷோவில் அதிரவிட்ட Gen Z பெண்.. நெட்டிசன்கள் ஷாக்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“3 லட்சம் சம்பளம், KTM பைக்” அவன் குடிக்கலைனாலும் நானே ஊத்திக் கொடுப்பேன்… வருங்காலக் கணவர் குறித்து டிவி ஷோவில் அதிரவிட்ட Gen Z பெண்.. நெட்டிசன்கள் ஷாக்..!!

Published

on

“மாதம் 3 லட்சம் சம்பளம், KTM பைக் வைத்திருக்க வேண்டும்; அவரே குடிக்காவிட்டாலும் நானே மது ஊற்றிக் குடிக்க வைப்பேன்” என்று தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஜென்-சி தலைமுறையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தங்களது தாய்மார்கள் முன்னிலையிலேயே நெறியாளர் ஆவுடையப்பன் நடத்திய இந்த விவாதத்தில், வருங்காலக் கணவர் குறித்த தனது விசித்திரமான கனவுகளை அந்தப் பெண் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.

தனது கணவருக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது முதல் சமைப்பது வரை எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்று அந்தப் பெண் விளக்கியுள்ளார். “ஒருவேளை உங்களுக்கு வரப்போகும் கணவர் குடிக்காதவராக இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று நெறியாளர் கேட்டதற்கு, “அப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்; குடிக்கும் பழக்கம் உள்ள வாலிபரைத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று அவர் பிடிவாதமாகக் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது பெற்றோருக்குள் மதுப்பழக்கத்தால் சண்டை வந்ததால், தனது கணவருக்கு அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

Advertisement

இந்த விவாத வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் திருமண எதிர்பார்ப்புகள் என்பது தனிநபர் விருப்பம் என்று கூறினாலும், பெரும்பாலானோர் மாதம் 3 லட்சம் வருமானம், குறிப்பிட்ட பைக் மற்றும் கணவரை மது குடிக்க வைப்பேன் என்ற பெண்ணின் முதிர்ச்சியற்ற பேச்சு எதிர்காலத்தில் அவரது திருமண வாழ்க்கையையே பெரிய சிக்கலில் தள்ளிவிடும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in