“ஹில் ஸ்டேஷன் போலாம் வா..!”ஆசைகாட்டி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காதலன்.. 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… கலங்கவைக்கும் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஹில் ஸ்டேஷன் போலாம் வா..!”ஆசைகாட்டி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காதலன்.. 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… கலங்கவைக்கும் பகீர் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரிஷரீஃப் ரயில் நிலையம் அருகே 19 வயது இளைஞர் ஒருவன், தனது 15 வயது காதலியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களாக ஹாஜிப்பூரில் தனது காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவளது காதலன் புதன்கிழமை அன்று டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகவும், அங்கிருந்து ஏதேனும் ஒரு மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்வதாகவும் கூறி ஹாஜிப்பூரிலிருந்து பாட்னா ஜங்ஷனுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஜங்ஷன் செல்வதாகக் கூறி, மாலை 6 மணி உள்ளூர் ரயிலில் ஏற்றியுள்ளான். ரயில் புல்வாரிஷரீஃப் நிலையம் அருகே வந்தபோது, சிறுமியை ரயில் கதவு அருகே அழைத்துச் சென்று திடீரென ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

Advertisement

இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தனக்கு இடைஞ்சலாக இருக்கும் தன்னை விட்டு விலகவே காதலன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக சிறுமி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்னா ஜிஆர்பி காவல் நிலைய அதிகாரி மனோஜ் குமார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இளைஞரைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in