அடக்கொடுமையே..! தோழியின் மூக்கைக் கடித்துத் துப்பிய காதலி.. ஒரு இளைஞனுக்காக அடித்துக்கொண்ட பெண்கள்… காவல் நிலையத்திற்குள்ளேயே நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே..! தோழியின் மூக்கைக் கடித்துத் துப்பிய காதலி.. ஒரு இளைஞனுக்காக அடித்துக்கொண்ட பெண்கள்… காவல் நிலையத்திற்குள்ளேயே நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ‘கர்தனிபாக்’ மகளிர் காவல் நிலையத்தில் காதல் விவகாரம் தொடர்பாக நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இளைஞனுக்காக இரண்டு யுவதிகள் காவல் நிலையத்திற்குள்ளேயே மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் மையமாக உள்ள இளைஞர், மசௌரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். அந்த இளைஞர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றியதாகவும், தன்னிடம் பணம் வாங்கியதாகவும் அவரது காதலி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த இளைஞரே தனது காதலியைக் கூட்டிக்கொண்டு விசாரணைக்காக கர்தனிபாக் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றார்.

Advertisement

காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த இளைஞரின் சிறுவயது தோழியும் அவரது சகோதரரும் அங்கு வந்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த காதலி, இளைஞரின் தோழியைத் தாக்கி அவரது மூக்கைச் பற்களால் கடித்துக் காயப்படுத்தினார். இந்த மோதலில் பலத்த காயமடைந்த இளம் பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்; காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in