LATEST NEWS
பரபரப்பு..! வட்டாட்சியர் பெயரைச் சொல்லி ரூ.3.50 லட்சம் அமுக்கிய கிராம உதவியாளர்… அலேக்காக தூக்கிய காவல்துறை..!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச் செல்வதற்காக, வட்டாட்சியரின் பெயரைப் பயன்படுத்தி ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்த கிராம உதவியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த அரசு ஊழியரின் பெயர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தனது பெயரைச் சொல்லி கிராம உதவியாளர் முகமது சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தது குறித்து வட்டாட்சியர் ரவிச்சந்திரனுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வட்டாட்சியரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கிராம உதவியாளர் முகமதுவை நேற்று அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த லஞ்சச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
