நான் குடிப்பேன் சண்ட போடுவேன்… “ஆனா பொம்பளைங்க விஷயத்துல.” – கூவத்தூர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கருணாஸின் ஆவேசப் பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் குடிப்பேன் சண்ட போடுவேன்… “ஆனா பொம்பளைங்க விஷயத்துல.” – கூவத்தூர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கருணாஸின் ஆவேசப் பேட்டி..!!

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கூவத்தூர் சொகுசு விடுதி விவகாரத்தில், தன்னைப்பற்றி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் ஊடகம் ஒன்றில் ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா தரப்பால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட போது, அப்போதைய அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸும் அங்கு தங்கியிருந்தார். அப்போது தன்னைப்பற்றி பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டதாக அவர் தற்பொழுது வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய கருணாஸ், கூவத்தூர் விடுதிக்குத் தான் துணை நடிகைகளை அழைத்து வந்து நடனமாட வைத்ததாக மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் முற்றிலும் பொய்யான செய்தியை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனைச் சில மனிதர்கள் உண்மை என்று நம்பியது தனக்கு இன்றும் ஒரு சிறிய வருத்தத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். அரசியல் மற்றும் பொது வாழ்வில் தன் மீது சுமத்தப்பட்ட இந்த அவதூறுக்கு தற்பொழுது அவர் முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.

Advertisement

மேலும் தனது தனிப்பட்ட ஒழுக்கம் குறித்துப் பேசிய அவர், தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதையும், சில நேரங்களில் வீண் சண்டைகளுக்குச் செல்பவன் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பெண்கள் என்று வரும்பொழுது தான் அடிப்படையில் மிகவும் ஒழுக்கமானவன் என்றும், காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தன்னை நம்பி வந்த ஒரே நபர் தனது மனைவி கிரேஸ் மட்டும்தான் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட கருணாஸ், தன் மீதான வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in