LATEST NEWS
ரூ.25,000 டூ 1 லட்சம்… மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் பிளாக்கில் சிறப்பு டோக்கன் விற்ற அமைச்சர் நிர்மல் குமார்…? சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றசாட்டு…!!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த விழா, கடந்த 2018-ல் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாகத் தாமதமாகி தற்போது பக்திப் பெருக்கோடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வில், சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டனர்.
இந்த விழாவை ஒட்டிப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வழங்கப்பட்ட சிறப்புப் பிரவேச அட்டைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மீனாட்சியம்மனைப் பார்ப்பதற்கான சிறப்பு டோக்கன்கள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாகக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், இந்த விநியோகத்தில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் தலையிட்டு, தலா 25,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அந்த டோக்கன்களை விற்பனை செய்துள்ளார் என மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த டோக்கன் விற்பனைச் சர்ச்சை, அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், இந்த பாஸ் விவகாரங்களில் தங்களது தரப்பு எந்தவிதத் தலையீடும் செய்யவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
