என்ன கைது பண்ணனும்னா “3 கோடி பேர புடிக்கணும், ஆடாதீங்க” முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கோர்ட்டில் சாட்டை துரைமுருகன் அதிரடி சவால்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கைது பண்ணனும்னா “3 கோடி பேர புடிக்கணும், ஆடாதீங்க” முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கோர்ட்டில் சாட்டை துரைமுருகன் அதிரடி சவால்…!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியான யூடியூபர் சாட்டை துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தவெக கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏற்கனவே இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் அவர் இந்த நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சாட்டை துரைமுருகன் தனது முன் ஜாமீன் மனுவில், தவெக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் நலனுக்காகப் பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும், அதன் காரணமாகவே தான் யூடியூபில் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது எவ்விதத்திலும் குற்றமாகாது எனவும் அவர் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதற்கிடையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் விவகாரத்தை ஒப்பிட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருமையில் பேசியதற்காகக் கைது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அரசு விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் இப்படி கடுமையான போக்கைக் கையாளுவது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in