CRIME
அடப்பாவமே.. வாய் பேச முடியாத.. காது கேளாத இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கத்தக் கூட முடியாமல் துடிதுடித்த உயிர்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேசம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள கன்சிபூர் காவல் எல்லைக்குட்பட்ட கௌரி கிராமத்தில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத 22 வயது இளைஞரான சாருக் கான் என்பவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரொட்டி மற்றும் பிரெட் விற்றுத் தனது பிழைப்பை நடத்தி வந்த இந்த மாற்றுத்திறனாளி இளைஞரின் சடலம், அக்டோபர் 28 அன்று நாட் பஸ்தி அருகே உள்ள கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த அப்பகுதியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு மாற்றுத்திறனாளி இளைஞரை எதற்காக, யார் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தார்கள் என்ற மர்மம் நீடித்து வருகிறது. இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், கொலையின் பின்னணியைக் கண்டறியவும் காவல்துறையினர் உடனடியாக 8 தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.
