“குழாய் பழுதாகிடுச்சு பாட்டி..!” நைசாக பேசி குளியல் அறைக்குள் மூதாட்டியை பூட்டி வைத்து வேலைக்காரி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குழாய் பழுதாகிடுச்சு பாட்டி..!” நைசாக பேசி குளியல் அறைக்குள் மூதாட்டியை பூட்டி வைத்து வேலைக்காரி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன், தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி நிர்மலாவை (74) கவனித்துக் கொள்வதற்காக அரியலூரைச் சேர்ந்த சித்ரா (44) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார். சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில், சித்ரா திட்டமிட்டு இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

குளியல் அறை குழாய் பழுதாகிவிட்டதாகக் கூறி நிர்மலாவை அங்கு அழைத்துச் சென்ற சித்ரா, அவர் குனிந்தபோது கழுத்தில் இருந்த 10 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு, அவரை உள்ளே வைத்துப் பூட்டி, செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினார். மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டதைத் தொடர்ந்து, மடிப்பாக்கம் போலீசார் செல்போன் கோபுர சிக்னல் மூலம் தீவிரமாகத் தேடி, பஸ்சுக்காகக் காத்திருந்த சித்ராவை புகார் அளித்த 1 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in