“அம்மாடியோ.. 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய BMW…” 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..சிசிடிவி-யில் சிக்கிய நடுக்கமூட்டும் காட்சி..!!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய BMW…” 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..சிசிடிவி-யில் சிக்கிய நடுக்கமூட்டும் காட்சி..!!!

Published

on

மும்பை வொர்லி கடலோரச் சாலையில் நேற்று அதிகாலையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 75 அடி கீழே விழுந்து நொறுங்கிய பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மெரின் டிரைவிலிருந்து ஹாஜி அலியை நோக்கி அதிகாலை 5:20 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, அதை ஓட்டிவந்த 21 வயது இளைஞர் சனய் குஜார் அதிவேகத்தின் காரணமாக காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அப்போது லோட்டஸ் ஜெட்டி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது, கார் கட்டுப்பாடின்றி தடுப்புச் சுவரில் மோதி, கீழே கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த வாகன நிறுத்துமிடத்தில் தலைகீழாக விழுந்து முற்றிலும் உருக்குலைந்தது.

இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த அகமதாபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சனய் குஜார் (21), ஆதித்யா ஜகசானியா (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த ஆதித்யா ஓஸ்வால் (20) என்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, நாயர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொகுசு காரை மிக ஆபத்தான வேகத்தில் இயக்கியதே இந்தத் துயரமான விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ள போலீஸார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in