LATEST NEWS
அநியாயம் பண்ணுறீங்கடா..! “பொக்லைன் வச்சு தூக்குங்கப்பா..” குடிபோதையில் ஏரிக்குள் சிக்கிய ஜீப்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் தத்தளிப்பு வீடியோ…
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் வந்த இரண்டு வாலிபர்கள், ஏரிக்குள் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அங்கேயே மதுபோதையில் காரிலேயே அசந்து தூங்கியுள்ளனர்.
அவர்கள் எதிர்பாராத விதமாக நள்ளிரவில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஜீப் தண்ணீரில் முழுமையாக மூழ்கத் தொடங்கியது. நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்து எழுந்த வாலிபர்கள், தங்களைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.
உடனடியாக அந்த வாலிபர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் உதவி கேட்க, கிராம மக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, கயிறு கட்டி தண்ணீரில் மூழ்கியிருந்த ஜீப்பை பத்திரமாக மீட்டனர். குடிபோதையில் ஏரிக்குள் சிக்கிய ஜீப்பை பொக்லைன் மூலம் மீட்கும் இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
