Uncategorized
“அதிகாரிகள் கேட்கல… அதான் இங்க வந்தேன்!” முதலமைச்சர் இல்லம் அருகே டவரில் ஏறிய பெண் எடுத்த விபரீத முடிவு.. அலறியடித்த போலீஸ்.. பரபரப்பு சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நிலத்தை நில அபகரிப்பாளர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், லக்னோவில் உள்ள முதலமைச்சர் தங்குமிடத்திற்கு அருகேயுள்ள உயரமான கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா மாவட்டத்தில் தனது சொத்து பறிபோனது குறித்து அவர் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நீதி கேட்டு லக்னோவிற்கு வந்த அந்தப் பெண், முதலமைச்சர் இல்லத்திற்கு மிக அருகில் பார்க் ரோட்டில் அமைந்துள்ள ஒரு கோபுரத்தின் மீது அதிரடியாக ஏறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
முதலமைச்சர் இல்லத்தின் அருகே பெண் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறிய தகவல் கிடைத்தவுடன், ஹசரத்கஞ்ச் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கோபுரத்தின் மேலே இருந்த பெண்ணுடன் காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகப் பொறுமையுடன் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் ஒருவழியாக அந்தப் பெண்ணைப் பத்திரமாக கீழே இறக்கினர். இந்தத் துணிச்சலான போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சில மணி நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பான சூழலும் நிலவியது.
