அய்யோ கொடுமையே… தாய் கண்முன்னே நேர்ந்த கொடுமை… 4 வயது சிறுவனை பலி கொண்ட அடையாளம் தெரியாத வாகனம்.. கதறித் துடிக்கும் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே… தாய் கண்முன்னே நேர்ந்த கொடுமை… 4 வயது சிறுவனை பலி கொண்ட அடையாளம் தெரியாத வாகனம்.. கதறித் துடிக்கும் குடும்பம்..!!

Published

on

பொன்னாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் தாய் கண்முன்னே 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுளா என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் குழந்தைகள் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மஞ்சுளாவின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மஞ்சுளாவும் அவரது மகளும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in