LATEST NEWS
“பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டதா..?” வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி கேள்வி.. அதிரும் தமிழக அரசியல்..!!
பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்’ ஆர். வீரமணி மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது தோண்டத் தோண்ட அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 9 சிறுமிகள் மற்றும் பெண் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துப் புகாரளித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய பின்னணி கொண்ட சிறுமிகள் குறிவைக்கப்பட்டு இந்த பாலியல் சுரண்டல் அரங்கேறியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் போதுமான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், அதிகார மட்டத்திலிருந்தவர்களின் தலையீட்டால் இந்த வழக்கு திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டதாகப் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாகச் சென்னையில் பேசிய சட்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த கொடூரம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு இணையானது என்று மிகக் கடுமையாக ஒப்பிட்டுக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அப்போதைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை முழுமையாக மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இவ்வளவு பெரிய குற்றம் சென்னை நகரிலேயே நடந்தும் அது ஏன் மூடி மறைக்கப்பட்டது, குற்றவாளி தப்பிக்கவிடப்பட்டது எப்படி என்பது குறித்து அவர் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் நேரிடையாக வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
