LATEST NEWS
அலர்ட்..! அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் புயல்… தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… IMD கொடுத்த பரபரப்பு அப்டேட்..!!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணிநேரத்திற்குள் புயலுக்கு முந்தைய நிலையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன.
