“யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்..!” 15 வயது தம்பியை மிரட்டி அக்காவுக்கு தந்தை செய்த அநீதி.. மாடி தகரக் கொட்டகைக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்..!” 15 வயது தம்பியை மிரட்டி அக்காவுக்கு தந்தை செய்த அநீதி.. மாடி தகரக் கொட்டகைக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில், பெற்ற மகளையே சித்திரவதை செய்த ராகேஷ் என்பவனின் கொடூரச் செயல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உலுக்கியுள்ளது. ராகேஷிற்கு மூன்று திருமணங்கள் ஆகியிருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது இரண்டாவது மனைவி உயிரிழந்தார். அவர்களுக்கு 20 வயது மகளும் 15 வயது மகனும் இருந்தனர். இரண்டாவது மனைவியின் மறைவுக்குப் பிறகு மூன்றாவது திருமணம் செய்துகொண்ட போதிலும், ராகேஷின் தவறான நடத்தையால் பிடிக்காமல் அவரது மூன்றாவது மனைவியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இதன் பின்னர், ராகேஷ் தனது சொந்த மகளையே மனைவியாக நினைத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மகள் எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம், அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனது அக்காவிற்கு நடக்கும் இந்த கொடுமையைக் கண்ட 15 வயது மகனையும், யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்று ராகேஷ் மிரட்டி வைத்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல மகளின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், ராகேஷ் அவரை வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒரு தகரக் கொட்டகைக்குள் கயிற்றால் கட்டிப் பூட்டி வைத்துள்ளார். தொடர்ந்து 20 நாட்களாக அவருக்கு உணவோ, தண்ணீரோ வழங்காமல் பட்டினி போட்டுள்ளார். கடந்த 2026 அக்டோபர் 7 ஆம் தேதி, அந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாலும், கடந்த ஒரு மாதமாக அந்தப் பெண்ணை வெளியில் பார்க்காததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் காட்சி காத்திருந்தது. அங்கு எலும்பும் தோலுமாக, பேசக் கூட முடியாத மிகக் கடுமையான இக்கட்டான சூழ்நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை போலீசார் மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்குத் தண்ணீர் கொடுத்தபோது, அவர் ஒரே மூச்சில் ஒன்றரை லிட்டர் தண்ணீரைக்குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

Advertisement

எந்தவொரு மகளுக்கும் தன் தந்தை தான் மிகப்பெரிய பாதுகாப்பாக இருப்பார். ஆனால், அந்தப் பெத்த தந்தையே இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது உறவுகள் மீதான நம்பிக்கையையே முற்றிலுமாக சிதைக்கச் செய்துள்ளது. இன்று சமுதாயத்தில் உறவுகளின் புனிதமும், மனிதநேயமும் மறைந்து வருவதற்குப் பேராசையும், தார்மீக விழுமியங்களின் வீழ்ச்சியும், மனவிகாரங்களுமே முக்கியக் காரணங்களாக அமைகின்றன. இப்படிப்பட்ட சம்பவங்கள், நாம் வாழும் சமூகத்தில் மனிதர்கள் யாரை நம்புவது என்ற அச்சத்தை எற்படுத்துகின்றன. இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலமே சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in