“என்னைத் தேடி வந்து கடிக்குது…” 20 நாளில் 6 முறை கடித்த கருநாகம்.. கதறும் இளைஞர்..! பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னைத் தேடி வந்து கடிக்குது…” 20 நாளில் 6 முறை கடித்த கருநாகம்.. கதறும் இளைஞர்..! பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா  மாவட்டம், ஜஸ்வந்த்நகர் காவல் எல்லைக்குட்பட்ட நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த அன்குஷ் யாதவ் (21) என்ற இளைஞருக்கு, கடந்த 20 நாட்களில் ஆறு முறை பாம்பு கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குர்கானில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வரும் இவர், சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் தனக்குக் கடித்தது கரு நாகப்பாம்புதான் என்று அன்குஷ் உறுதியாகக் கூறுகிறார். தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோதும் கூட பாம்பு கடித்ததாகக் கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுள்ளார்.

ஒரே மகனுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பயந்துபோன அவரது குடும்பத்தினர், அவரை எட்டாவா  மாவட்ட மருத்துவமனைக்கும் சைபை மருத்துவக் கல்லூரிக்கும் சிகிச்சைக்காக மாற்றி மாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். மூடநம்பிக்கை காரணமாக உள்ளூர் மந்திரவாதி ஒருவரிடமும் அழைத்துச் சென்றுள்ளனர்; ஆனால் அவராலும் இதற்குத் தீர்வு காண முடியாமல் கைவிரித்துவிட்டார். அன்குஷ் மீண்டும் காலில் பாம்பு கடித்ததாகக் கூறி மாவட்ட மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரைத் தீவிர கண்காணிப்பில் வைத்து நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Advertisement

இந்த விசித்திரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாம்புப் பிடி நிபுணர் டாக்டர் ஆசிஷ் திரிபாதி, இளைஞருக்கு உண்மையில் ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகிக்கிறார். அந்த இளைஞர் ‘பாம்பு கடி பயம்’ என்ற உளவியல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், உடலில் ஏதேனும் சின்னக் காயம் அல்லது உணர்வு ஏற்பட்டாலும் அதை பாம்பு கடி என அவர் தவறாக நினைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இளைஞர் தொடர்ந்து பாம்பைப் பார்த்ததாகக் கூறிவருவதால், மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்து முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in