LATEST NEWS
“இதெல்லாம் ரொம்ப ஓவர்…” ஓடும் இரயிலில் வெளிநாட்டு பெண் செய்த காரியம்..! வைரல் வீடியோவால் பற்றி எரியும் விவாதம்..!!
இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு யோகா ஆசிரியை ஜோ செரெனிட்டி, இந்திய இரயிலின் 3rd AC பெட்டியில் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் சிலர் இந்திய கலாச்சாரத்தை மதிக்கும் செயல் என்று பாராட்டியுள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ இரயில் போன்ற கூட்ட நெரிசல் நிறைந்த பொது இடத்தில் யோகா செய்வது சக பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்றும், இது இரயில்வே விதிகளுக்கு எதிரானது என்றும் கூறி இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய ஜோ, நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளார். தனது பயணத்தின் போது மக்கள் மிகவும் அன்பாகப் பழகியதாகவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இரயில் இருக்கையின் கொக்கி காரணமாகத் தனக்குச் சற்று சிரமம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட அவர், இனிவரும் காலங்களில் அதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
https://www.instagram.com/reel/Ddf2ADRRilS/?utm_source=ig_web_button_share_sheet
ஜோ கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பயணம் செய்து வருகிறார். இமாச்சலப் பிரதேச கிராமங்களில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தாஜ்மஹாலைப் பார்வையிட்ட பிறகு தனது துணையுடன் ராஜஸ்தானில் உள்ள பாலைவனம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளார். முன்னதாக, பசுவைத் தாய் போலக் கருதி அதன் கன்னத்தில் முத்தமிடும் இவரது வீடியோவும் இணையத்தில் பலராலும் விரும்பப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.
