LATEST NEWS
யூடியூபில் பணத்தைக் காட்டி வீடியோ போட்டதால் வந்த வினை… வீட்டை உடைத்து 118 சவரன் நகைகளை அள்ளிய கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் யூடியூபர் மதுமிதா..!!
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுமிதாவின் கணவர் வினோத்குமார் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைச் சூறையாடிச் சென்றுள்ளனர்.
முன்னதாக, யூடியூபர் மதுமிதா தனது வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தைக் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை வைத்தே மர்ம நபர்கள் நோட்டமிட்டு, அவர்கள் வெளியில் சென்ற நேரம் பார்த்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
