எத்தனை முறை அது நடந்திருக்கு..? மக்கள் முன்னாடி நடிக்கிறீங்களா..? சரமாரி கேள்விகளால் சீறிய ஸ்டாலின்.. அலறும் தவெக.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

எத்தனை முறை அது நடந்திருக்கு..? மக்கள் முன்னாடி நடிக்கிறீங்களா..? சரமாரி கேள்விகளால் சீறிய ஸ்டாலின்.. அலறும் தவெக..

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “திமுகவும், பாஜகவும் வேறு வேறு இல்லை என்று பேசியிருக்கும் நீங்கள், கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் தவெகவின் கூட்டணி அமைச்சர் ஒருவரே பாஜகவை விமர்சித்து பேசினாலும், அலறியடித்துக்கொண்டு அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யார் என்பது மக்களுக்குத் தெரியாதா என்றும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார் . விஜய்யின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிரான தங்களின் பலவீனமான நிலைப்பாட்டையே காட்டுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மேலும், பாஜகவை எதிர்த்து விஜய் செய்ததெல்லாம் வெறும் “அமைதிப் புரட்சி” மட்டும்தானே, அதாவது அது ஒரு வகையான சரணாகதிதானே என்று மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார் . விஜய்யின் அரசியல் பேச்சுக்களை மேடை நாடகம் எனச் சாடியுள்ள ஸ்டாலினின் இந்த எக்ஸ் பதிவு, தமிழக அரசியல் களத்தில் தற்போது தவெக மற்றும் திமுக இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in