“பெற்றோர்களே உஷார்.. தாய்ப்பாலில் கலந்திருக்கும் ‘நச்சு’..!” KGMU நடத்திய ஆய்வில் வெளியான நெஞ்சை உலுக்கும் திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெற்றோர்களே உஷார்.. தாய்ப்பாலில் கலந்திருக்கும் ‘நச்சு’..!” KGMU நடத்திய ஆய்வில் வெளியான நெஞ்சை உலுக்கும் திடுக்கிடும் உண்மை..!!

Published

on

லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், தாய்ப்பாலில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் மற்றும் கன உலோகங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்விற்காக, பாலூட்டும் 100 தாய்மார்களின் பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 96 சதவீத மாதிரிகளில் ‘ஓக்ராடாக்சின்’ நச்சும், 73 சதவீத மாதிரிகளில் ‘அஃப்லாடாக்சின் எம்1’ நச்சும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, குரோமியம், மாங்கனீசு, ஆர்சனிக், காட்மியம் மற்றும் ஈயம் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கன உலோகங்களின் எச்சங்களும் தாய்ப்பாலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள், உணவுச் சங்கிலி வழியாகப் பெண்களின் உடலுக்குள் நுழைந்து, இறுதியில் தாய்ப்பால் மூலமாகக் குழந்தைகளுக்குக் கடத்தப்படுவதே இதற்குக் முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளுக்குச் செல்லும் இந்த நச்சுப் பொருட்கள், அவர்களின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பிற முக்கிய உடல் உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், இது குறித்து முறையான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என்றும் மருத்துவப் பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in