அச்சச்சோ..! நடுரோட்டில் ஸ்போர்ட்ஸ் காரை சுழற்றி சுழற்றி சாகசம் செய்த இளைஞர்..! பரபரப்பான கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உச்சகட்ட பீதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சச்சோ..! நடுரோட்டில் ஸ்போர்ட்ஸ் காரை சுழற்றி சுழற்றி சாகசம் செய்த இளைஞர்..! பரபரப்பான கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உச்சகட்ட பீதி..!!

Published

on

ஹரியானா மாநிலம் குரு கிராமில் உள்ள முக்கியப் பகுதியான கோல்ஃப் கோர்ஸ் சாலையில், இளைஞர் ஒருவர் அதிநவீன சொகுசு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி ஆபத்தான முறையில் டிரிஃப்டிங் சாகசத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான இந்த சாலையில் பிற வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையிலும், சிறிதும் அச்சமின்றி அந்த காரை அதிவேகமாக சுழற்றி ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றவே, அந்த வீடியோ வைரலாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்து விதிகளைப் புறக்கணிக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இந்த அசாத்திய சாகசச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த வீடியோவைக் கொண்டு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் பதிவு எண்ணைக் கண்டறிந்து, சம்பவத்தின் போது வாகனத்தை ஓட்டிய நபரை அடையாளம் காணும் பணிகளில் குரு கிராம் காவல்துறை ஈடுபட்டுள்ளது. பொதுச் சாலைகளில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in