“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?”குழந்தைகள் கண்முன்னே கணவன் செய்த கொடூர காரியம்.. மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?”குழந்தைகள் கண்முன்னே கணவன் செய்த கொடூர காரியம்.. மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

அப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில், நோரியா (32) என்ற பெண் அவரது கணவரால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நெஞ்சைப் பிளக்கும் பயங்கரக் கொலைச் சம்பவம், அந்தப் பெண்ணின் நான்கு சிறு குழந்தைகளுக்கு முன்பாகவே அரங்கேறியுள்ளது பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைப் போன்ற இதயத்தை நொறுக்கும் பல கொடூரமான சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் வெளியில் தெரியாமலேயே மூடி மறைக்கப்படுகின்றன. அங்குள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தோ அல்லது அநீதி குறித்தோ வெளியில் பேசுவதற்கு மிகவும் பயப்படுவதால், பெரும்பாலான சம்பவங்கள் செய்தி அறிக்கைகளாகப் பதிவாவதே இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்ற ஆதங்கம் உலக அரங்கில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in