LATEST NEWS
“180 பேரின் உயிர் காத்த ரியல் ஹீரோ..!” இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ரூ. 1 கோடி சர்ப்ரைஸ் பரிசு… மேன்கைண்ட்பார்மாவின் மாஸ் அறிவிப்பு..!!
Fly Dubai விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் உயிரை சாதுர்யமாகவும் துணிச்சலாகவும் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு Mankind Pharma நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆபத்தான சூழலிலும் அசாதாரணமான துணிச்சல், நிதானம் மற்றும் பொறுப்புணர்வை ஸ்மித் மச்சார் வெளிப்படுத்தினார் என Mankind Pharma நிறுவனம் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி வீடியோ காலில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது அவரது வீரத்தையும், பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாதுர்யமான செயலையும் பிரதமர் மோடி நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
