“உன் பிரச்சினையை நானே தீர்த்துவைக்கிறேன் வா” பிளஸ்-2 மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த காதலன் மற்றும் 4 பேர் கும்பல்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் பிரச்சினையை நானே தீர்த்துவைக்கிறேன் வா” பிளஸ்-2 மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த காதலன் மற்றும் 4 பேர் கும்பல்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை விடுதி அறைக்கு அழைத்துச் சென்ற அஜன், அவரைப் பலவந்தமாகப் பலாத்காரம் செய்ததோடு, அந்த அதிர்ச்சி காட்சிகளைத் தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு மிரட்டியுள்ளார். மாணவி அதற்கு மறுக்கவே, அந்த ஆபாச வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு அந்த வாலிபர் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்துத் தனது உறவினரான விவேக் (32) என்பவரிடம் கூறி அழுதுள்ளார். ஆனால், அந்த மாணவிக்கு உதவுவது போல் நடித்த விவேக், அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி அவரும் அந்த மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு நிறுத்தாமல், இந்தத் தகவலைத் தனது நண்பரான தினேஷ் (29) என்பவரிடமும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் அச்சுறுத்தல்களைத் தான் தீர்த்து வைப்பதாக நம்ப வைத்து அழைத்துச் சென்ற தினேஷ், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாணவியை ஒரு வாரம் அடைத்து வைத்து, மது கொடுத்துத் தனது மற்றொரு நண்பரான ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவனுக்கும் விருந்தாக்கிச் சித்ரவதை செய்துள்ளார்.

Advertisement

அவர்களிடமிருந்து ஒரு வழியாகத் தப்பித்துத் தனது வீட்டிற்கு வந்த மாணவி, பெற்றோரிடம் நடந்த அனைத்து கொடூரங்களையும் கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து உடனடியாகக் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, குற்றவாளிகளான காதலன் அஜன், உறவினர் விவேக், தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் பள்ளி மாணவியின் வாழ்க்கை சீரழிந்த இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in