LATEST NEWS
முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியில் உள்ள 4 கால்களுமே ஊழல் கால்கள்… லிஸ்ட் போட்டு திமுக பரந்தாமன் கடும் தாக்கு..!!
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மீது கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்குவதாகவும், அவர்களைப் பதவி விலகச் செய்து செயற்கையாக இடைத்தேர்தல்களை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் தனது கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை பலத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கில் இத்தகைய ஜனநாயக விரோத முயற்சியில் ஈடுபட்டு வருவதாகப் பரந்தாமன் விமர்சித்துள்ளார். மேலும், தவெக அரசு மற்ற கட்சிகளின் ஆதரவில்தான் இயங்கி வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய முதலமைச்சரின் நாற்காலிக்கு அடிப்படையாக உள்ள நான்கு கால்களுமே முழுக்க முழுக்க ஊழல் கால்கள்தான் என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
அரசியலில் தூய்மை மற்றும் நேர்மை பற்றிப் பேசும் விஜய், திரைமறைவில் குதிரை பேரம் மூலம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி வருவதாகத் தவெக அரசுக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பரந்தாமன் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
