LATEST NEWS
பரபரப்பு டுவிஸ்ட்..! “நான் அந்த முட்டாள்தனத்தை செய்ய மாட்டேன்” நாஞ்சில் சம்பத் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற அமைப்பில் இணைந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று நாஞ்சில் சம்பத் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் அவர் தவெக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் நடிகர் தனுஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி இந்த வதந்திக்கு வழிவகுத்தது.
இதுகுறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நாஞ்சில் சம்பத், தனுஷுடன் தாம் இணைந்ததாகப் பொய் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை தாம் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், தான் இன்னமும் தமிழக வெற்றிக் கழகத்தில்தான் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டு, பரப்பப்படும் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
