ரொம்ப கோவக்காரரா இருப்பார் போல..! காதல் மனைவி வர மறுத்ததால் ஆத்திரம்.. மாமனார் வீட்டு வாசலில் நின்ற 3 ஸ்கூட்டர்களுக்குத் தீ வைத்த கணவன்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப கோவக்காரரா இருப்பார் போல..! காதல் மனைவி வர மறுத்ததால் ஆத்திரம்.. மாமனார் வீட்டு வாசலில் நின்ற 3 ஸ்கூட்டர்களுக்குத் தீ வைத்த கணவன்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கோபித்துக் கொண்டு மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கணவர் பலமுறை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக சமாதானம் செய்ய முயன்றும், மனைவி அவரது கணவர் வீட்டிற்குத் திரும்பி வர மறுத்துவிட்டார்.

நாட்கள் பல கடந்தும் மனைவி வர மறுத்ததால் விரக்தியடைந்த கணவர், மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஸ்கூட்டர்களுக்குத் தீ வைத்துள்ளார். இச்சம்பவம் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். மேலும் இந்த மோதல் குறித்தும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தது குறித்தும் காவல்துறையினர் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in