“மச்சக்காரன்ப்பா..! நான் யாரையும் வற்புறுத்தல.. அவங்களாவே வந்து கேட்டாங்க..” 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் பிச்சைக்காரர்..! ஷாக்கில் நெட்டிசன்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மச்சக்காரன்ப்பா..! நான் யாரையும் வற்புறுத்தல.. அவங்களாவே வந்து கேட்டாங்க..” 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் பிச்சைக்காரர்..! ஷாக்கில் நெட்டிசன்ஸ்..!!

Published

on

வங்காளதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மோரு மியா என்ற பிச்சைக்காரர், தனக்கு 21 மனைவிகள் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். தான் எந்தவொரு பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவில்லை என்றும், பெண்களே தாமாக முன்வந்து தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் புன்முறுவலுடன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தேடி வந்த பெண்களில் பலர் தன்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றும், அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பது அவர்களை அவமதிப்பது போல் இருக்கும் என்பதால் மனதார ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

21 மனைவிகள் இருந்தாலும், மோரு மியாவின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகவே உள்ளது. அவர் ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வசித்து வருவதோடு, பிச்சை எடுப்பதையே தனது முதன்மை வருமானமாகக் கொண்டுள்ளார். தினசரி வாழ்க்கையில் அவரது மனைவிகள் மாறி மாறி பங்கேற்கின்றனர்; அதாவது, ஒவ்வொரு நாளும் ஒரு மனைவி அவருடன் பிச்சை எடுக்கச் செல்வதாகவும், மறுநாள் அடுத்த மனைவிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தனது 21 மனைவிகளின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி, ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா போன்ற சில பெயர்களை மட்டும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

Advertisement

மோரு மியாவின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இத்தனை மனைவிகளுடன் பிச்சை எடுத்து எப்படி வாழ்க்கையைச் சமாளிக்கிறார் என்று ஆச்சரியத்துடனும் நகைச்சுவையாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதே வேளையில், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது திருமண ஆகாமல் இருந்த பெண்களுக்கு மோரு மியா வாழ்வளித்திருக்கலாம் எனச் சிலர் நேர்மறையான கோணத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in