“இவர் மனிதர் அல்ல, கடவுள்..!” 40 உயிர்கள்.. திடீரென வந்த மரண வலி.. அடுத்த நொடியே ஸ்டீயரிங்கை இறுக்கிப் பிடித்து ஓட்டுநர் செய்த தியாகம்.. கண்ணீர்க் கடலில் மூழ்கிய பயணிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இவர் மனிதர் அல்ல, கடவுள்..!” 40 உயிர்கள்.. திடீரென வந்த மரண வலி.. அடுத்த நொடியே ஸ்டீயரிங்கை இறுக்கிப் பிடித்து ஓட்டுநர் செய்த தியாகம்.. கண்ணீர்க் கடலில் மூழ்கிய பயணிகள்..!!

Published

on

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆர்.டி.சி அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சிவா, தனக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு வலியையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாகச் செயல்பட்டுப் பேருந்தை ஓரமாக நிறுத்தி, 40 உயிர்களைக் காப்பாற்றிவிட்டுத் தனது இறுதி மூச்சை விட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மரண வலி தன்னைத் தாக்கிய அந்த நொடியிலும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தால் 40 பயணிகளின் உயிரும் பறிபோய்விடும் என்பதை உணர்ந்த சிவா, துளியும் பதற்றமடையாமல் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துப் பேருந்தைப் பாதுகாப்பாகச் சாலையின் ஓரமாக இழுத்து நிறுத்தினார்.

பேருந்தை ஓரமாக நிறுத்திய அடுத்த சில நொடிகளிலேயே ஓட்டுநர் சிவா அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து நின்றதும் அதிர்ச்சியடைந்த நடத்துநரும் பயணிகளும் உடனடியாக அவரை மீட்க முயன்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. தனது உயிர் பிரியும் நிலையிலும், தங்களின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தெய்வப் பிறவியான ஓட்டுநரின் உடலைப் பார்த்துப் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தன்னலமற்ற இந்த வீர ஓட்டுநரின் அசாத்தியமான தியாகம் மற்றும் கடமையுணர்வு குறித்த செய்திகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கண்களையும் குளமாக்கி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in