LATEST NEWS
“தைரியத்துல அம்மா… உருவத்துல எம்.ஜி.ஆர்..!” அதிமுக தொண்டர்கள் விஜய்யை எப்படி பாக்குறாங்க தெரியுமா..? ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவும் திமுகவும் நல்லாட்சி கொடுத்ததாகப் பேசி, தவெகவை வீழ்த்த முயன்றதாகவும், ஆனால் அவரின் பொய் பிரச்சாரங்களை உணர்ந்த அதிமுக தொண்டர்கள் தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுகவின் 1,300 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 12,000–13,000 கிளைக்கழக செயலாளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் கடந்த 10 நாட்களாகத் தவெகவைத் தொடர்புகொண்டு வருவதாகக் கூறினார். உண்மையான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் பழனிசாமியை விலக்கி தவெகவை நோக்கி வரத் தொடங்கிவிட்டதாகவும், மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் நகர செயலாளர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆராகவும், தைரியத்தில் ஜெயலலிதாவாகவும் பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது காங்கிரஸின் 40 சதவீத வாக்கு வங்கியும் நிர்வாகிகளும் அவரிடம் சென்ற வரலாற்றை சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, அன்றைய பக்தவத்சலத்தைப் போலத்தான் இன்றைய எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும், இதனால் அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார். பழனிசாமி மீது மக்களும் தொண்டர்களும் நம்பிக்கையிழந்து விட்டதாகவும், நேர்மையாக நின்று, ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தவெகவை வெற்றிபெற வைத்த முதலமைச்சரின் தலைமையில் தவெக எப்போதும் நேர்மையாகச் செயல்படும் என்றும் கூறி முடித்தார்.
