ரூ.30 கோடி சொத்தை மறைத்தாரா விஜய்..? பண்ருட்டி சொத்து விவகாரம்… CM விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.30 கோடி சொத்தை மறைத்தாரா விஜய்..? பண்ருட்டி சொத்து விவகாரம்… CM விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில் பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், சொத்துகளைக் குறைத்துக் காட்டியதற்காக மட்டும் ஒரு தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் தொடர்ந்த இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, ஏற்கனவே சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களைப் பிரமாணப் பத்திரத்தில் முறையாகக் குறிப்பிட்டுள்ள விஜய், வெறும் ரூ.30 கோடி சொத்தை ஏன் வேண்டுமென்றே மறைக்கப் போகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தணிக்கையாளர் கணக்கிட்டதில் ஏற்பட்ட இத்தகைய விடுபடல்கள் ஊழல் நடைமுறையாகுமா என்றும், இது வாக்காளர்களின் முடிவை எந்த வகையில் பாதித்திருக்கும் என்றும் வினவிய நீதிபதி, விஜய் ஒரு பிரபல நடிகராக இருந்தவர் என்பதால் கணக்காளர் செய்யும் சிறு தவறுகளைக் காரணமாக வைத்து தேர்தலைச் செல்லாது எனக் கோர முடியாது என்ற விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டறிந்தார்.

Advertisement

மறுபுறம், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளிக்கவோ அல்லது உண்மைகளை மறைக்கவோ சட்டப்படி இடமில்லை என்றும், பண்ருட்டி சொத்து விவரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதால் வழக்கை நிராகரிக்கக் கூடாது என்றும் வாக்காளர் தினேஷ் தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in