என்ன கொடுமை இது..! ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவி… வழிமறித்து மிரட்டி நகையை பறித்த 3 பேர்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

என்ன கொடுமை இது..! ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவி… வழிமறித்து மிரட்டி நகையை பறித்த 3 பேர்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!

Published

on

நெல்லை பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அந்த மாணவியை மிரட்டி அவரிடம் இருந்த 4 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். மேலும், அவரது ஆண் நண்பரிடமிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் முடிவில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரையும், அவருடன் இருந்த 17 வயது சிறுவன் ஒருவரையும் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர்.

Advertisement

மேலும், இந்த வழக்கோடு தொடர்புடைய மற்றொரு சிறுவன் ஏற்கனவே வேறு ஒரு குற்ற வழக்கில் சிக்கி சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in