அரசுப்பணத்துல சொகுசு வாழ்க்கை… மனைவியின் ஆடம்பர ஆசைகளுக்காக 98 லட்சம் சுருட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கணவன்.. சிக்கிய திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசுப்பணத்துல சொகுசு வாழ்க்கை… மனைவியின் ஆடம்பர ஆசைகளுக்காக 98 லட்சம் சுருட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கணவன்.. சிக்கிய திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் பாகல்பூர் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றி வந்த அவிநாஷ் ராஜ் என்பவர், தனது மனைவியின் ஆடம்பர ஆசைகள் மற்றும் சொகுசு வாழ்க்கையை நிறைவேற்றுவதற்காக அரசு நிதியில் சுமார் ₹98 லட்சம் முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். HRMS தொழில்நுட்ப நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்த இவர், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் சக ஊழியரின் ரகசிய ஐடியைப் பயன்படுத்தி, ஒரு போலி பெண் ஆசிரியரின் பெயரில் தொடர்ந்து அரசு பணத்தை திருடி வந்துள்ளார்.

இந்த முறைகேட்டுப் பணம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து யுபிஐ (UPI) மூலம் அவிநாஷ், அவரது மனைவி காஜல் மற்றும் நில வியாபாரி உள்ளிட்டோரின் கணக்குகளுக்குப் பிரித்து மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு அவிநாஷ் 2 ஆடம்பர கார்கள், பைக் மற்றும் 3 நிலங்களை வாங்கியதோடு, மனைவி காஜலுடன் டார்ஜிலிங், மணாலி, சிக்கிம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று உல்லாசமாகச் செலவிட்டுள்ளார்.

Advertisement

நிதித் துறை மற்றும் போலிசாரின் தீவிர விசாரணையில் இந்த மிகப்பெரிய மணி டிரெயில் (Money Trail) அம்பலமானது. சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளில் இருந்த ₹46 லட்சம் முடக்கப்பட்டது. இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும் அவிநாஷ் அதிகாரிகளிடம் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் எனப் பேரம்பேச முயன்றார். ஆனால் அதிகாரிகள் மறுத்ததால் தலைமறைவான அவரை, சிறப்புப் படையினர் கண்காணித்து பாங்கா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in