அடக்கொடுமையே.. திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள நேர்ந்த கொடூரம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி புதுப்பெண்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள நேர்ந்த கொடூரம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி புதுப்பெண்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மலக்பேட் டி-மார்ட் எக்ஸ் ரோடு அருகே சனிக்கிழமை நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சரூநகர் பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் எதிர்பாராதவிதமாக நழுவி கீழே விழுந்துள்ளது. அப்போது பின்னால் வந்த ஆர்.டி.சி அரசுப் பேருந்தின் அடியில் அவர் சிக்கியதால், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதிதான் லாவண்யாவிற்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபத்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சாடர்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி, சிசிடிவி ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in