“எடப்பாடி பெயரே இருக்கக்கூடாது” ஆட்டத்தை தொடங்கிய SP வேலுமணி… அதிமுகவில் மீண்டும் தலைதூக்கும் தலைமைத்துவ போட்டி.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எடப்பாடி பெயரே இருக்கக்கூடாது” ஆட்டத்தை தொடங்கிய SP வேலுமணி… அதிமுகவில் மீண்டும் தலைதூக்கும் தலைமைத்துவ போட்டி.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

Published

on

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தங்களின் முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனை என உரிமை கொண்டாடுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு, அக்கட்சிக்குள் புகைந்து வரும் உள்விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் தனது தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டம் என்று இபிஎஸ் கூற, வேலுமணியோ இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்றும், ஒட்டுமொத்த அதிமுக அரசின் சாதனை என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இபிஎஸ்-இன் பெயரையோ அல்லது அவரது பங்களிப்பையோ வேலுமணி குறிப்பிடாமல் தவிர்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, வேலுமணி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகளில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைத் தவிர்த்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய பதிவுகளிலும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் இபிஎஸ்-ஐ ஓரங்கட்டும் வகையில் வேலுமணியின் இந்த செயல்பாடுகள் அமைந்திருப்பது, அவர் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இபிஎஸ்-இன் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்த வேலுமணியின் இந்த திடீர் மாற்றம் அதிமுகவிற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் தோல்விகளின் எதிரொலியாகவே, வேலுமணி மீண்டும் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தொடர் தேர்தல் தோல்விகளால் கட்சியின் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் கொங்கு மண்டல அரசியலில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஒரு உத்தியாகவே இந்த மோதல் பார்க்கப்படுகிறது. உட்கட்சிப் பூசல் மற்றும் தலைமத்துவப் போட்டி மீண்டும் தலைதூக்கியிருப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் அதிமுகவிற்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in