CRIME
” உன்னிடம் பேச வேண்டும்..” வேற ஒருவருடன் நிச்சயமான காதலி.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தின் பூதர்காட் தாலுகாவிற்குட்பட்ட சிவ்தாவ்-நாயக்வாடி பகுதியில், பொறியியல் படித்து வந்த தரன்னும் பஷீர் நாயக் என்ற இளம் பெண், அவரது காதலனான ஸ்ரீபத் தின்கர் வாதர் என்பவரால் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், தரன்னுமிற்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபாத், தன்னைத் தவிர்ப்பதாகக் கூறி தரன்னுமைப் பேச வேண்டும் என்று வரவழைத்து, சிவ்தாவ்-நாயக்வாடி பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை திடீரெனக் காணாமல் போன தரன்னுமைத் தேடி வந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். ஆரம்பத்தில், காதலன் ஸ்ரீபாத் இப்பெண்ணின் மரணத்தைத் தற்கொலை போலக் காட்டி போலீசாரைத் திசைதிருப்ப முயன்றார். இருப்பினும், போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பூதர்கர் போலீஸாரும் சஹ்யாத்ரி மீட்புக் குழுவினரும் இணைந்து பள்ளத்தாக்கிலிருந்து தரன்னுமின் உடலை மீட்டனர். முதலில் கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த விவகாரத்தில், தற்போது கொலைக் குற்றச்சாட்டும் சேர்க்கப்பட்டு பூதர்கர் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
