“இவங்களையெல்லாம் என்ன சொல்றது..?” திருப்பதிக்கு மதுவோடு போயிட்டு, மாட்டிக்கிட்டதும் சாக்கடையில் கொட்டும் அவலம்..! வைரலாகும் ஷாக் வீடியோ.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவங்களையெல்லாம் என்ன சொல்றது..?” திருப்பதிக்கு மதுவோடு போயிட்டு, மாட்டிக்கிட்டதும் சாக்கடையில் கொட்டும் அவலம்..! வைரலாகும் ஷாக் வீடியோ.!!

Published

on

திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் உள்ள சப்தகிரி சோதனைச் சாவடியை எட்டுவதற்கு முன்பாக, பயணிகள் சிலர் தங்கள் வாகனத்தில் வைத்திருந்த மதுபாட்டில்களை சாலையோர சாக்கடையில் ஊற்றி அழிக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக ஸ்தலமான திருமலைக்கு மதுபானங்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடியில் பாதுகாப்புக் காவலர்களிடம் சிக்காமல் இருக்க பயணிகள் இவ்வாறு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்டு வீடியோ பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், தான் இந்தச் சம்பவத்தில் வெறும் பார்வையாளர் மட்டுமே என்றும், விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், திருமலைக்கு மதுபானங்களைக் கொண்டு செல்ல முயன்றவர்களைக் கண்டறிந்து தடுத்த பாதுகாப்புக் காவலர்களின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அவர், விதியை மீறும் நோக்கத்தோடு தான் இந்த வீடியோவைப் பகிரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DeUe58HJuxY/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளப் பயனர்கள் பலரும் தங்களுக் குரிய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “பக்தியுடன் வர விருப்பம் இல்லாதவர்கள் இதுபோன்ற ஆன்மீகத் தலங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும், மதுபாட்டில்களை சாக்கடையில் ஊற்றுவதோடு விட்டுவிடாமல், திருமலையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் மதுபானங்களை எடுத்துவர முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in