CRIME
“அடக்கடவுளே இது என்ன கொடுமை..” வயல்வெளியில் கேட்ட விசித்திர சத்தம்.. ஓடிப்போய் பார்த்த கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெற்ற தாயே செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம், விந்தியாச்சல் காவல் எல்லைக்குட்பட்ட சிக்ரா கலா கிராமத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சேற்று வடிகாலில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புதன்கிழமை காலை கிராம மக்கள் தங்களது வயல்களுக்குச் சென்றபோது, சாக்கடை வடிகாலில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, இரக்கமற்ற யாரோ ஒரு தாய், பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ அல்லது திருமணமாகாத உறவினால் பிறந்த குழந்தை என்ற பயத்தினாலோ, பிறந்த உடனே அக்குழந்தையைச் சேற்றுக்குள் வீசிச் சென்றது தெரியவந்தது. துர்நாற்றம் வீசிய நிலையிலும் மனிதநேயத்துடன் கிராம மக்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்ததோடு, முன்னாள் கிராமத் தலைவர் சோனு பதக் மூலமாக 112 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு உடனடியாக விஜய்பூர் சரோயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC) கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் ரத்னாகர் மிஸ்ரா, குழந்தைக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காகப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது மருத்துவமனையில் அக்குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், அதன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குழந்தையை வீசிச் சென்ற இரக்கமற்ற தாய் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
