“உன் மருமகளை நான் கொன்னுட்டேன்…” காதலியின் மாமாவிடமே சவால் விட்ட கொடூரக் காதலன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் மருமகளை நான் கொன்னுட்டேன்…” காதலியின் மாமாவிடமே சவால் விட்ட கொடூரக் காதலன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி சிப்ரி பஜார் காவல் எல்லைக்குட்பட்ட சித்தேஷ்வர் நகரில், சஞ்சல் என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சலும் அதே பகுதியைச் சேர்ந்த கமல் என்ற இளைஞனும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததோடு, திருமணமும் செய்துகொள்ள விரும்பியுள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதிக்காத நிலையில், சஞ்சலின் பெற்றோர் அவருக்கு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

தனுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணச் செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த கமல், சஞ்சல் வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திப் பின்கதவு வழியாகச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே நுழைந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சஞ்சலின் நெற்றியில் கமல் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிய கமல், வழியில் சஞ்சலின் மாமாவான மோனு ராய்க்வாரைச் சந்தித்தபோது, சஞ்சலைத் தான் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து சஞ்சலின் குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில், சிப்ரி பஜார் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இக்கொலைச் சம்பவத்தால் சித்தேஷ்வர் நகர் பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் நிலவி வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளியான கமலைப் பிடிக்கப் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in