LATEST NEWS
இது மெட்ரோவா..? பியூட்டி பார்லரா..? ரயிலுக்குள் குளியல் உடையில் வந்த பெண்ணின் அலும்பு… வைரலாகும் ஷாக் வீடியோ..!!
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. டெல்லி மெட்ரோவில் அவ்வப்போது பல விசித்திரமான மற்றும் விநோதமான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண்மணி குளியல் அறைக்கு அணியும் பிரத்யேக உடை அணிந்திருப்பதுடன், தலையில் டவலையும் கட்டிக் கொண்டு மெட்ரோ ரயிலில் அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தனது கண்களுக்குக் கீழே அழகு பராமரிப்புக்கான பேட்ச்களையும் ஒட்டியுள்ளார். ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர் தனது சருமப் பராமரிப்பு வழக்கத்தை செய்துகொண்டே பயணம் செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த வித்தியாசமான வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துக்களை அதிரடியாகப் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் “இது மெட்ரோ ரயிலா? அல்லது அழகு நிலையமா?” என்று வியப்புடன் கேள்வி எழுப்பி, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
