LATEST NEWS
சல்யூட் சார்.! ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்… அங்கிருந்த யாருமே காப்பாத்தல… தனியாளாக காப்பாற்றி 1 கி.மீ தோளில் சுமந்து சென்று கடமையாற்றிய காவலர்..!!
கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையிலுள்ள மந்த்ராலயம் இராகவேந்திர சுவாமி கோயிலுக்கு வந்திருந்த ஜெயசீலா என்ற திருமணமான பெண், துங்கபத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது உடலை மீட்பதற்கு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் முன்வரவில்லை.
அந்த இக்கட்டான சூழ்நிலையில், மந்த்ராலயம் கோயில் காவலராகப் பணியாற்றும் ரங்கசாமி என்பவர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு மீட்பு பணியில் இறங்கினார். அங்கிருந்தவர்களின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல், நதியிலிருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலைத் தனது தோளில் சுமந்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே கொண்டு சேர்த்தார்.
மனிதாபிமானத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த காவலர் ரங்கசாமியின் இந்தச் செயல், அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலைத் தனி ஒருவனாகத் தோளில் சுமந்து சென்று சேர்த்த அவரது கடமை உணர்வையும், மனிதநேயத்தையும் சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
