“நான் போகிறேன் காதலியே” தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்… சிறைக்குள் நடந்த அந்த ஒரு சம்பவம்… மரண தண்டனை கைதியின் கண்ணீர் காதல் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் போகிறேன் காதலியே” தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்… சிறைக்குள் நடந்த அந்த ஒரு சம்பவம்… மரண தண்டனை கைதியின் கண்ணீர் காதல் கதை..!!

Published

on

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 25 வயது அரசியல் போராட்டக்காரரான அலிரேசா செபாஹி , தனக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சிறைச்சாலையின் தொலைபேசி வாயிலாகத் தனது காதலியைத் திருமணம் செய்து கொண்ட சோகமான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்பஹான் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை தூக்கிலிடப்பட்டார்.

அலிரேசா செபாஹியும், அவரது 22 வயது காதலியான மஹ்ஷாத் கஷானியும் (Mahshad Kashani) ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசுக்கு எதிரான தீவிரப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டனர். மஹ்ஷாத் கஷானிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அலிரேசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமே அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், மேடைக்குச் செல்லும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதால் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், அவர் குணமடைந்ததும் மீண்டும் மரண தண்டனைக்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

தனது காதலனுக்கு இன்னும் சில மணி நேரமே ஆயுள் இருக்கிறது என்பதை அறிந்த மஹ்ஷாத், சிறையிலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். மனித உரிமை வழக்கறிஞரான அமீர்சாலர் தாவூதியின் உதவியுடன் இரு வெவ்வேறு சிறை வளாகங்களில் இருந்த இருவருக்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் தந்தைகளும் முன்னிலையிருக்க, வெறும் 9 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தத் தொலைபேசித் திருமணத்தில் ஒரு புனித குர்ஆன், ஒரு குங்குமப்பூ மிட்டாய் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா ஆகியவை ஆன்மீக வரதட்சணையாக வழங்கப்பட்டு திருமண உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் அங்கிருந்த சிறை அதிகாரிகளுமே கண்ணீர் வடித்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அலிரேசா தூக்கிலிடப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in