LATEST NEWS
“இவனையெல்லாம் நிக்க வச்சி சுடணும்” வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் குழந்தை… ரத்தக்கறையோடு ஒரே கதறல்… வீட்டில் யாருமில்லா நேரம் 35 வயது நபர் செய்த கொடூரம்..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வீட்டில் தனியாக இருந்த 11 மாத பச்சிளம் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டின்கீழ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று, அவர் தனது 11 மாத பெண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அண்டை வீட்டைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பாலியல் ரீதியாகக் கடுமையான வன்கொடுமை இழைத்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தாய், குழந்தை பயங்கரமாகக் கதறி அழுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது குழந்தையின் ஆடைகள் கலைந்து, இரத்தக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு பதறிய அவர், அதே நேரத்தில் அந்த நபர் வீட்டை விட்டு தப்பியோடுவதையும் நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியை பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
