LATEST NEWS
“உங்களுக்கு ஆளுநர் பதவி என்பது ஆட்டின் தாடி போன்றது தானே..?” அன்பில் மகேஷ் ஊழல் வழக்கில் திமுகவை வெளுத்து வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் நடைபெற்றது. ஆளுநரின் முறையான ஒப்புதல் இல்லாமல் தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அன்பில் மகேஷ் தரப்பிற்குப் பல அதிரடி கேள்விகளை எழுப்பினார். “திமுகவை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்பது ஆட்டின் தாடி போன்றது தானே, அவர்களுக்கு ஆளுநர் என்ற ஒன்றே தேவையில்லாதது தானே? அப்படி இருக்கையில், ஆளுநரின் அதிகாரம் பற்றி எல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது?” என்றும், “ஆட்டுத்தாடியுடன் தானே ஆளுநர் பதவியை திமுக ஒப்பிடும்?” என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி அன்பில் மகேஷ் தொடர்ந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
