இவளெல்லாம் தாயா..? பெற்ற பிள்ளைகளை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவளெல்லாம் தாயா..? பெற்ற பிள்ளைகளை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பெற்ற குழந்தைகளையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் சுகன்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் கம்பால் கொடூரமாக அடிக்கப்பட்டும், உடலின் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்தினாலேயே இந்தக் குழந்தைகள் மீது இத்தகைய இரக்கமற்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

குழந்தைகளின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் தாய்மாமன் இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in