CRIME
“குழந்தையைக் கீழே போடுங்க..!” தீப்பிழம்புகளுக்கு நடுவே 2-வது மாடி ஜன்னலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 மாத குழந்தை… கீழே நின்ற தொழிலாளி செய்த அதிசயம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
2019-ஆம் ஆண்டு நியூ மெக்சிகோவில், அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கூரை வேயும் பணியில் ஈடுபட்டிருந்த மேசன் ஃபியரோ என்ற கட்டுமானத் தொழிலாளி, பக்கத்து வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து இரு பிஞ்சுயிர்களைத் தன் சாதுரியத்தால் காப்பாற்றியுள்ளார். பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாகக் கேட்ட அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிச்சென்ற ஃபியரோ, அங்கு ஒரு தந்தை தனது 2 மாத பெண் குழந்தையைத் தீப்பிழம்புகளுக்கு நடுவே இரண்டாம் மாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கவிடுவதைக் கண்டார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஃபியரோ, “குழந்தையைக் கீழே போடுங்கள், நான் பிடித்துக் கொள்கிறேன்” என்று கத்தியதைத் தொடர்ந்து, அந்தத் தந்தை குழந்தையைக் கீழே போட, ஃபியரோ அதனைப் பத்திரமாகத் தனது கைகளில் ஏந்திப் பிடித்தார்.
அடுத்த சில நொடிக் கணங்களில், அந்தத் தந்தை தனது 3 வயது மகனையும் ஜன்னல் வழியே வெளியே போட, அவனையும் ஃபியரோ லாவகமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அதோடு நின்றுவிடாமல், ஃபியரோவும் அவரது குழுவினரும் உடனடியாகத் தீப்பற்றிய கட்டிடத்தின் மற்ற வீடுகளின் கதவுகளைத் தட்டி, அங்கு தவித்துக் கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் மூன்று பேர் மட்டுமே லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், “அந்தக் கட்டுமானத் தொழிலாளர்களின் துணிச்சலான மற்றும் உடனடிச் செயலால் மட்டுமே அந்தக் குழந்தைகள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்” என்று உள்ளூர் தீயணைப்புத் துறையினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
