“நாங்க கறி சாப்பிட மாட்டோம்…” காதலிக்காக முஸ்லிம் வேடத்தில் வந்த இந்து மாப்பிள்ளை.. கடைசியில் ஒரே ஒரு தட்டு உணவால் உடைந்த மாஸ்டர் பிளான்..! கல்யாண வீட்டில் நடந்த வினோத சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க கறி சாப்பிட மாட்டோம்…” காதலிக்காக முஸ்லிம் வேடத்தில் வந்த இந்து மாப்பிள்ளை.. கடைசியில் ஒரே ஒரு தட்டு உணவால் உடைந்த மாஸ்டர் பிளான்..! கல்யாண வீட்டில் நடந்த வினோத சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாதேர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் பேடி என்ற இந்து இளைஞர், ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், அப்பெண்ணின் யோசனைப்படியே விராட் பேடி ‘ஷாநவாஸ்’ என்ற போலி அடையாளத்துடன் முஸ்லிம் மணமகனாக வேடமிட்டு திருமணத்திற்குச் சென்றுள்ளார். டெல்லி மருத்துவமனை ஒன்றில் தனது சகோதரியின் சிகிச்சையின் போது அறிமுகமான இந்த ஜோடி, பெண்ணின் வீட்டார் மற்றும் கிராம மக்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தது.

திருமணத் சடங்குகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், மணமகன் மற்றும் அவருடன் வந்த போலி வீட்டாரும் நண்பர்களும் சாப்பிடுவதற்காக அசைவ உணவு (இறைச்சித் தட்டு) பரிமாறப்பட்டது. அப்போது நவராத்திரி காலம் என்பதால், மணமகன் வீட்டாராக வேடமிட்டு வந்தவர்கள் இறைச்சி உணவைச் சாப்பிட முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்தனர். வழக்கத்திற்கு மாறாக முஸ்லிம் திருமணத்தில் இறைச்சியைச் சாப்பிட மறுத்ததால், மணப்பெண் வீட்டாரும் கிராம மக்களும் சந்தேகமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, நிக்காஹ் (திருமணம்) சடங்குகளை முடிப்பதற்காக மௌலவியும் கிராம மக்களும் மணமகனின் ஆதார் கார்டு மற்றும் அடையாளச் சான்றுகளைக் கேட்டபோது, அவர்கள் தர மறுத்து பிடிவாதம் பிடித்தனர். இதனால் சந்தேகம் வலுக்கவே மைனாதேர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் கிரண்பால் சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில், மணமகனின் உண்மையான பெயர் விராட் பேடி என்பதும், அவர் போலி அடையாளத்துடன் வந்ததும் அம்பலமானது. இறுதியில் எவ்வித சட்டச் சிக்கலுமின்றி, மணமகள் இல்லாமலேயே மணமகன் வீட்டார் டெல்லிக்குத் திரும்பிச் சென்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in