LATEST NEWS
“கடவுள் என்னை இதற்காகத்தான் அனுப்பினார்…” மரணத்தின் விளிம்பில் இருந்த 4 வயது சிறுவன்… “எரியும் தீயில் வெறும் கையால் சாம்பலைத் தோண்டி காப்பாற்றிய நிஜ ஹீரோ..!!
எட்வர்ட்ஸ், மிசிசிப்பியில் நடைபெற்ற ஓர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தின்போது, வீட்டிற்குள் 6 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல்களை உடைத்து ஆபத்திலிருந்த குழந்தைகளை மீட்கும் பணியில் இறங்கினர். ஐந்து குழந்தைகள் பத்திரமாக வெளியில் கொண்டு வரப்பட்ட நிலையில், 4 வயது சிறுவன் ஒருவன் தீப்பற்றி எறிந்த வீட்டிற்குள் மாயமானது தெரியவந்தது. அடர்ந்த புகையும் கொழுந்துவிட்டு எரியும் தீயும் மீட்கும் முயற்சியைக் கடினமாக்கியது.
அப்போது, கென்னார்ட் ஹாட்ஜ் என்ற அண்டை வீட்டார் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய வெறும் கைகளால் எரியும் இடிபாடுகளையும் சாம்பலையும் தோண்டித் துருவித் தேடத் தொடங்கினார். இறுதியில் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து, எரியும் கட்டிடத்திலிருந்து வெளியில் மீட்டு வந்தார். எனினும், வெளியில் கொண்டு வரப்பட்டபோது அச்சிறுவன் மயக்க நிலையிலும் மூச்சுப் பேச்சின்றியும் காணப்பட்டான்.
உடனடியாக அங்கிருந்த ஷெரிப் அதிகாரி சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். அனைவரின் தீவிர முயற்சிக்குப் பிறகு, அற்புதம் நிகழ்ந்தது போல அச்சிறுவன் மீண்டும் மூச்சு விடத் தொடங்கினான். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவன் தற்சமயம் குணமடைந்து வருகிறான். கடவுள் அளித்த இந்த மறுவாய்ப்பைக் காப்பாற்ற உறுதுணையாக இருந்த கென்னார்ட் உட்பட 4 பேரின் துணிச்சலான இச்செயலைப் பலரும் பாராட்டி கௌரவித்துள்ளனர்.
